சினிமா செய்திகள்
சந்திரமுகி-2 படத்தின் 2-வது டிரெய்லர் வெளியீடு
சினிமா செய்திகள்

'சந்திரமுகி-2' படத்தின் 2-வது டிரெய்லர் வெளியீடு

தினத்தந்தி
|
23 Sept 2023 11:54 PM IST

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி-2 படத்தின் 2-வது டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், சந்திரமுகி-2 படத்தின் 2-வது டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.



மேலும் செய்திகள்